ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

351 0

7-party-members-830x623யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக ஆராய ரெலோ எழு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள் இன்று வல்லை வெளியில் உள்ள யாழ் பீச்ஹோட்டலில் (06-11-06) சந்தித்தன. ரெலோ சார்பில் அதன் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ்.மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான என். சிறீகாந்தாஇ பிரதித்த தலைவர் ஹன்ரிமமேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர் தரப்பு கட்சிகளான இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈழ புரட்சிகரவிடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலைக் கழகம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஏழு கட்சிகளும் ஹோட்டிலில் நேற்றுகாலை 10.00 மணி தொடக்கம் 12.00 மண வரை கூடி ஆராய்ந்து தமதுதீர்மானங்களை எடுத்திருந்தன.

இத் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு ரெலோ கட்சியைச் சேர்ந்தசிறிகாந்தா கருத்துத் தெரி விக்கையில்:-

இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய படுகொலை தொடர் பிலே பாரபட்சம்அற்றதும் பூரண மானதுமான புலன் விசாரணையினை எவ்வித தலையீடுகளும்அற்ற நீதி விசாரணைகளையும் நாங்கள் கோருகிறோம்.

மேலும் இப்படுகொலைகளின் பின்னணியும் காரணிகளும் விசாரணையூடாக கண்டறியப்பட வேண்டும் என மேலும் கோருகிறோம். இவ்விதம் முழு உண்மையும்கண்டறியப்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள்நிகழ்வதை தடுக்க முடியும் என நாங்கள் தெரிவித்து நிற்கிறோம்.

இப் படுகொலைகளைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுக்கள் எனக் கூறப்படுகிற குழுக்களை சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மற்றும்நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையும் அதனை மேலும் தீவரப்படுத்தும் விதத்தில் சில தரப்பினரினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை சுட்டிக்காட்டியும் இவ்நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமும்ஒழுங்கும் நிலை நாட்டப்படுவதையும் பொதுமக்களின் பாதுகாப்பினைஉறுதிப்படுத்தக் கோரி ஓர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்வது எனவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். இது எங்கு எப்போதுநடத்தப்படும் என பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை தொடர்பில்உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினையும், பிரதமரினையும்கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும்தீர்மாணிக்கப்பட்டுள்ளது என சிறிகாந்த தகவல் தெரிவித் திருந்தார். முன்னர்இடம்பெற்ற ஹர்த்தாலுக்கும் ரெலோவே அழைப்பு விடுத்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.