மீண்டும் தமிழர்– முஸ்லிம் புறக்கணிப்பு- ஆசிரியர் சங்கம்

187 0

கல்விக்கான விசேட செயலணியில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. இந்நிலையில் அனைத்து இன மக்களினதும் கல்வியை எவ்வாறு முன்னேற்ற முடியுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் கல்விக்கான விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதில் 12பேர் உள்ளடங்கின்றனர். ஆனால், தமிழ் , முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லை.

இந்நிலையில் அனைத்து இனங்களினதும் கல்வியை எவ்வாறு முன்னேற்ற பாதையை நோக்கி கொண்டுச் செல்ல முடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.