மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

203 0

நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறுவனமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆணைக்குழு தயாராகியுள்ளது.

சரியான தரவுகளை தயாரித்து, மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணி தொடர்பிலான சரியான புள்ளிவிபரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான தேவை உள்ளது.

நாட்டில் அதிகளவான காணிகளின் உரித்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் உள்ளது.

எனினும், கடந்த காலங்களில் அதற்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமையினால் அந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டதாகவும் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.