மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என்கிறார்திலும் அமுனுகம

278 0

dilum-amunugamaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக சுதந்திரம் காணப்பட்டது என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கம் வந்து ஊடக நிறுவனங்களை மூடிய போதிலும் மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கு சுதந்திரம் காணப்பட்டது. அப்பம் சாப்பிட்டு கட்சியை விட்டு பாய்ந்து ஓடியவர்களுக்கு கட்சியின் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

நல்லாட்சிக்கு வாக்களித்த 99 வீதமானவர்கள் இன்று அதிருப்தியுடன் இருக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்திலும் இலங்கையில் ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் காணப்பட்டது. வாக்கு பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

பிணை முறி மோசடி தொடர்பில் ஆளும் கட்சியின் அனைவரும் பொறுப்பு சொல்ல வேண்டும். 30 ஆண்டுகள் போர்ச் சாபத்தினால் இருளில் இருந்த தமிழ் மக்களுக்கு விடிவினை ஏற்படுத்திக் கொடுத்தவர் மஹிந்த ராஜபக்சவேயாகும்.

படைவீரர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் என்ற காரணத்தைக் காட்டி அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்ளை ஒத்தி வைத்து வருகின்றது. இளைஞர்களுக்கு பத்து லட்சம் தொழில் வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிம் அவ்வாறு தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வென்றெடுக்கப்பட்ட போர் இன்று தலை கீழாக மாற்றமடைந்து வருகின்றது. இது பற்றி பேசும் எம்மை இனவாதிகள் என அடையாளப்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.