முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க ஜே.வி.பியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும்.
ஆட்சியை கவிழ்க்கமுடியாத போதிலும் சரியான பாதையில் செயற்பட அழுத்தம் கொடுக்க முடியும் என முன்னையின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.