தமிழகத்திலுள்ள மற்றுமொரு தொகுதி ஈழ அகதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுக்கும் சுயவிருப்பின் பேரில் நாடு திரும்புவோருக்கு வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் 20ஈழ அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
10 குடும்பங்களைச் சேர்ந்த குறித்த ஈழ அகதிகள் சென்னையில் இருந்து கொழும்பை வந்தடைவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி கூறியுள்ளார்.
இவர்களில் 10 பெண்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் சொந்த இடங்களான வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் எனவும் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.