பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் இடம்பெறும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமத்தில் உள்ள விகாரைகளின் பிக்குகள் மற்றும் பொலிஸாரை இணைத்துக் கொள்ளாமல் போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க முடியாது.
எனினும் அதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர் பொலிஸில் சுத்திகரிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இதனை பொலிஸ்மா அதிபரும் அறிந்துள்ளார்.
பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும் அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்கார்களின் முகவர்களாக மாறியுள்ளனர் எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.