யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவனாகிய பவுண்ராசா சுலக்சனின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.
பவுண்ராசா சுலக்சனின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் குடும்ப நிலவரங்களை பார்வையிட்டதுடன், குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தைகளையும் கூறியுள்ளார்.
இதன்போது குடும்பத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.