நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே இன்று மதியம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பொது மக்களின் தகவலுக்கமைய வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோதே ஆணின் சடலமொன்று இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.
மூடப்பட்டு பாதுகாப்பற்ற நிலையிலிருந்த குறித்த வர்த்தக நிலையத்திலிருந்தே பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.