திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயச்சந்திரன் கிஷாந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபரைக் கைது செய்த போதே, கைக்குண்டும் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
அத்துடன், கைப்பற்றப்பட்டது கே.400 ரகத்தைச் சேர்ந்த கைக்குண்டென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.