ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

305 0

gl-perisமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தவிசாளராக ஜீ.எல்.பீரிஸை அண்மையில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து பீரிஸின் கட்சி உறுப்புரிமையை கட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது.

மற்றுமொரு அரசியல்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட காரணத்தினால் பீரிஸ் கட்சியிலிருந்து தானாகவே நீங்கிக்கொண்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வேறும் ஒர் கட்சியின் அங்கத்துவம் வகிக்கும் நபர் ஒருவர் சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.