சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் ஜீ.எல் பீரிஸ்

320 0

glமுன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளார்.

சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாப்புக்கு அமைய, கட்சியின் உறுப்பினர் ஒருவர் புதிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால், இயல்பாகவே அவரது கட்சியின் உறுப்புரிமை ரத்தாகும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியை பெற்றுள்ள ஜீ.எல் பீரிஸின், சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இயல்பாகவே இழந்தார் என்பது குறிப்பிட்டார்.