ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் ஏலத்தில் விடப்படுவதாக, அந்த நாட்டு செய்திதாள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இதுதொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளார்.
டைம்ஸ் ஒப் ஓமான் குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.
ஓமானின் சோஹார் பிரதேசத்தில் இலங்கை பணிப்பெண்கள், தூதுவர் காரியாலயத்திற்கு தெரியாமல், விற்பனை செய்யப்படுவதாக டைம்ஸ் ஒப் ஓமான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.