தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

407 0

201611061110276109_dmk-spokesman-theepori-arumugam-died-mk-stalin-tribute_secvpfதி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் (வயது78). இவர் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல் நலம் தேறி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

நேற்று இரவு 9 மணியளவில் ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தீப்பொறி ஆறுமுகத்துக்கு சங்கரவடிவு என்ற மனைவியும், பாலசுப்பிரமணியன், முருகேசன் என 2 மகன்களும், முத்துசெல்வி, ரத்தினம், பழனியம்மாள் என 3 மகள்களும் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கிறது.

பின்னர் அவரது உடல் கீரைத்துறையில் அடக்கம் செய்யப்படுகிறது.

தீப்பொறி ஆறுமுகத்தின் உடலுக்கு தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மதியம் மு.க.ஸ்டாலின் மதுரை வந்து தீப்பொறி ஆறுமுகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இறுதிச்சடங்கில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, வேலுசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.