ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல தடை!

217 0

ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.

 

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் காலி பிரதி பொலிஸ்மாதிபரின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றும்  ஷானி அபேசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய உரையாடல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு நுகேகொட  நீதிமன்றம் வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்துள்ளது.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.