சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன்  ஆறுதல் தெரிவித்தார்

340 0

 

download-2பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது சுலக்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இரா. சம்பந்தன் மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.