சோமாலியா நாட்டின் பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின்மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷு நகரில் உள்ள பாராளுமன்றம் அருகே அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர். ஐந்து வீரர்கள் பலியாகினர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டிருந்த காரை ஓட்டிவந்த தீவிரவாதி, ராணுவ வாகனத்தின்மீது மோதி இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.