பிரிகேடியர் சுரேஸ் சாலியின்கீழ் இயங்கிய புலனாய்வுப் பிரிவுகள் கலைப்பு!

333 0

brigadier-tuan-suresh-sallay-1இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரின் கீழ் செயற்பட்டு வந்த இரண்டு புலனாய்வு அமைப்புக்கள் கலைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராகச் செயற்பட்ட பிரிகேடியர் சுரேஸ் சாலி பதவி நீக்கம் செய்யப்பட்டு, பிரிகேடியர் விஜேந்திர குணதிலக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்து அவருக்குக் கீழ் செயற்பட்ட இரண்டு புலனாய்வு பிரிவுகளே கலைக்கப்பட்டன.

பிரிகேடியர் சுரேஸ் சாலி மீதான நம்பிக்கை இழக்கப்பட்டதையடுத்தே அவர் இந்தப்  பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், பிரிகேடியர் சாலியின் நீக்கத்துக்கு, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களும் ஒரு காரணம் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னைய ஆட்சியாளர்களுடன், பிரிகேடியர் சுரேஸ் சாலி நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை புதிதாக இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் விஜேந்திர குணதிலக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவராவார்.