மனித உரிமை ஆணையாளரின் கருத்துகள் தொடர்பிலாக விமர்சனங்கள்

449 0

Zeid-Husseinஇலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இதன்படி, அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ள போதிலும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர் மரணமான நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில இணைய தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அனைத்து விடயங்களும், தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், மெதுவான நடைமுறை பின்பற்றப்படுவதாக ஆணையாளர் குறிப்பிட்டிருப்பதாக குறித்த தளம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில், இலங்கை மீது நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
அத்துடன், ஐக்கிய நாடுகளும் இலங்கைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதிகாரமும் இல்லை என இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையிலேயே, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் யோசனைகளை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் தெரிவித்துள்ளார்.
எனினும், போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்ற விடயமும், வன்னியில் மீட்கப்பட்ட கொத்தணிக்குண்டுகள் விடயத்திலும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலில் செயிட ராட் அல்; ஹூசேனின் வலுவான கண்காணிப்புகளாக அமைந்திருப்பதாக ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

Leave a comment