இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்ய ஆலோசனை

256 0

01col1134620036_4726676_06092016_spp_gryமலேசியாவில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்வதற்கு மலேசிய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்தாலோசிக்க, மலேசியாக்கு சென்றுள்ள இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவரிடம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கான குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த குழவை மலேசியாவில் தடைசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இலங்கையின் அதிகாரிக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தாக்குதலை நடத்தயவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைளை தாக்கல் செய்ய மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இதேவேளை இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணை நாளை மீண்டும் நீதிமன்றத்துக்கு வருகிறது.