கூட்டு படைகளின் வான் தாக்குதல் – 30 பொதுமக்கள் பலி

278 0

5635_content_isis_newvideo_004ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

குண்டூஸ் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் சிறப்பு படையினர் இந்த வான் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பலர் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் குறிப்பிடுள்ளன.

அத்துடன், தாலிபன் அமைப்பை சேர்ந்த மூன்று தளபதிகளும், ஆப்கான் மற்றும் அமெரிக்க படையினர் ஐந்துபேரும் இந்த தாக்குதலில் உயிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பில், அமெரிக்க – ஆப்கான் கூட்டு விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.