பிணை முறி தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் கருத்து

292 0

makkal-viruppam352மத்திய வங்கியின் பிணை முறி பரிவர்த்தனை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 10 ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பானது, தமது மாகாண சபையின் ஆறு மாத செலவீனங்களுக்கு சமமானது என ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த விடயத்தின் உண்மை நிலை தெரியவில்லை.

எனினும், சகல பணியாளர்களின் வேதனம் மற்றும் அபிவிருத்தியின் பொருட்டு, தமது மாகாணத்திற்கு ஆண்டுக்கு 19 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த வங்கி கொடுக்கல் வாங்கலின் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் எமக்கு கிடைக்கப்பெற்;றிருக்குமானால், ஊவா மாகாணத்திற்கு 8 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.