வடக்கில் செயற்படும் ஆவா குழுவுடன் இராணுவத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
பியகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு மக்களை ஏமாற்றி, அச்சுறுத்தி பணம் பெறும் குழுவாக இந்த குழு இயங்கி வருகிறது.
இந்த குழு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தொடர்பான சகல தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.