தற்போதைய அரசாங்கம் எந்தவொரு காணியையும் விற்பனை செய்ய போவது இல்லை-ஷெகான்

247 0

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு காணித் துண்டையும் அதேபோல் ஏதேனும் அரச நிறுவனங்களையும் விற்பனை செய்ய போவது இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´எமது கொள்கைகளுக்கமைய முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும். ஐக்கிய தேசியக் கட்சி நாம் காணிகளை விற்றதாக தெரிவிக்கின்றது. அதனை நாம் நிராகரிக்கின்றோம்.

நாட்டுக்கு முதலீட்டு வாய்ப்புகள் கிடைப்பதை தடுக்கும் செயற்பாடுகளே அவை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எந்தவொரு காணியும் விற்கப்படமாட்டாது. 200 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை 250 மில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க எண்ணியுள்ளோம். எமது ஆட்சியின் ஒருபோதும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படாது.´ என தெரிவித்துள்ளார்.