தேசிய கல்வி கொள்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்வி துறையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதில் போட்டித் தன்மை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.