ஹப்புத்தளையில் வீழ்ந்தது விமானம் ,4 பேர் பலி

251 0

ஹப்புத்தளை பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறியரக விமானமொன்று ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்வாறு விபத்திற்குள்ளான சிறியரக விமானமானது இலங்கை விமானப்படைக்குச் சொந்தமானது என்று விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வீரவில பகுதியில் இருந்து பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y12 ரக விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்நிலையில் குறித்த விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது