சீனத்தூதுவர் கடந்த வாரம் வெளியிட்ட கருத்து தொடர்பில் தமது அமைச்சு ஆராய்வதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி உட்பட்ட விடயங்கள் குறித்து சீனத்தூதுவர் அண்மையில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் ஒவ்வாத அரசியல் குறித்து தாம் திருப்திக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நாட்டின் கொள்கையை மாற்றிக்கொள்ளாதுவிட்டால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறப்பட்டதாக சில அமைச்சர்கள் கூறிவருவதையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்தே இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.