வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

289 0

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 4 ஆயிரத்துக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 862 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பவுசர் தெரிவித்துள்ளார்.