அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த ஐ.தே.க. தீர்மானம்!

303 0

அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

மேலும் இதன்போது அரசியல் பழிவாங்கலை எதிர்கொள்ளும் அரசு அதிகாரிகள் தொடர்பாக சாதகமான நடவடிக்கை எடுக்கத் தவறியது பற்றியும் விவாதிக்கப்பட்டது என கூறினார்.

இந்த விவகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறினார்.