சிறைச்சாலை மதிலை இணைத்து வீடுகளை நிர்மாணிக்கும் கலாசாரம் இங்கு தான் உள்ளது – நிமல் சிறிபாலடி

262 0

சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுவரும் கைதிகளின் நன்டத்தையை மாதாந்தம் ஆராய்ந்து அவர்களை சமூகமயமாக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருவதாக நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் இந்த வேலைத்திட்டங்கள் முறையாக இடம்பெறாதமையும் சிறைச்சாலைகளில் இட நெருக்கடிக்கு காரணமாகும்.

சிறைச்சாலை மதிலை இணைத்து வீடுகளை நிர்மாணித்திருக்கும் நாடு இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கட்டடங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும்அவற்றுக்கு நிரப்பூச்சு பூசுவதற்கும் தனியார் நிறுவனங்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சீமெந்து மற்றும் நிறப்பூச்சுகளை சிறைச்சாலை ஆணையாளருக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.