சம்மாந்துறையில் ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்தவர்கள் மஹிந்தவுடன் இணைவு!

317 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 51 கிராமசேவகர் பிரிவிற்கான இணைப்பாளர்கள், அங்கத்தவர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளரும் வை.எம் முஸம்மில் தலைமையில் நேற்று(புதன்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

விவசாய அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஒரு மணித்தியாலத்தில் 3000 அங்கத்துவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர்.