தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்!

318 0

tnaதமிழ் அரசியல் கைதிகளை இந்த மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை இன்று(05) அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எந்த தீர்மானமும் இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிட்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய சந்தர்ப்பத்தில் கைதிகளுக்கான தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தெரிவத்திருந்த போதும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது