டெல்லியில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பைக்கை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் (வயது 20). இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை தடுத்து நிறுத்திய டிராபிக் போலீசார், அபராதம் விதித்தனர். இதற்கான செல்லானை அவரிடம் கொடுத்து, அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த விகாஸ், தனது பைக்கை திடீரென தீயிட்டு கொளுத்தினார். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விகாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.