புது வருடப்பிறப்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

263 0

புதுவருடப்பிறப்பு தினமான நேற்றையதினம் றாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் றாகம, கென்டலியந்தபலுவ பகுதியில் நேற்று புதன்கிழமை (01.01.2020) இரவு 8 மணியளவில் இடம்பெற்றள்ளது.

வாகனத் தகராறு காரணமாகவே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை றாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.