1956இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மொழியைத் திணித்தனர். இப்போது வட, கிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்விடயம் ஊர் அறிய வேண்டும். உலகம் அறியவேண்டும். முக்கியமாக எமது மக்களுக்கான தலைவர்கள் அறியவேண்டும்.
நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ள கருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களைச் சிந்திக்கச்செய்யும். இப்பொழுதே பல சிங்கள இளம் சமுதாயத் தம்பிமார்கள் உண்மையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது;
கேள்வி-: நீங்கள் ஏன் இத்தருணத்தில், அதாவது புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்றும் புதிய பாராளுமன்றம் ஒன்று பரிணமிக்கப்போகும் வேளையில், சிங்களவர்கள் பற்றியும் பௌத்தம் பற்றியும் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்டு வருகின்றீர்கள்? தெற்கில் உங்கள் மீது பலத்த எதிர்ப்பு உருவாகிவருவதை நீங்கள் உணரவில்லையா?
பதில்: -என்னிடம் தெற்கிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தேன். அக் கேள்வியானது முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் மத்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து முன்செல்ல உடன்படும் போது ஏன் வட, கிழக்குத் தமிழர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றவாறு அமைந்திருந்தது.
என்னுடைய பதிலில் வட, கிழக்குத் தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் தனித்துவம் பற்றியும் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் சிங்கள மக்கள் தம் பாரம்பரியம் பற்றி கொண்டிருக்கும் தவறான சிந்தனைகள் பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. பத்து வருடங்களுக்கு மேல் ஒரு சட்ட ஆசிரியராக இருந்த நான் கேள்விகள் கேட்கப்படும் போது அவற்றுக்கான தக்க பதில்கள் எவ்வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று உய்த்துணர முடியாத நிலையில் இருக்கவில்லை. குறித்த கேள்வி இந்தக் காலகட்டத்தில் வெளியேவரவேண்டிய சில விடயங்களை அம்பலப்படுத்த உதவியது. அந்தச் சந்தர்ப்பத்தை நான் நழுவவிடவில்லை.
இதுவரையில் தனித்து நாங்கள் எங்கள் மத்தியில் பேசிவந்த சில விடயங்களை நான் அம்பலப்படுத்தியுள்ளேன். நான் கண்ட உண்மையை வஞ்சகமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளேன். நான் வெளிப்படுத்திய உண்மைகள் நான் வாசித்தறிந்த விடயங்கள் மட்டுமல்ல பல சரித்திர ஆசிரியர்களுடனான கருத்துப் பரிமாற்றமும் அவ்வுண்மைகளை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
அவர்கள் சிலரிடம்” ஏன் இவற்றை வெளிப்படுத்த நீங்கள் முன்வரவில்லை என்று கேட்ட போது”அது எப்படி சேர்?” என்று மட்டும் பதிலளித்தார்கள்.
நாளை எனக்கொருபக்க உதவி வேண்டுமென்ற நிலை வந்துவிட்டால் இவர்கள் ஒருவரேனும் என் சரித்திரம் பற்றிய கருத்துக்களை ஆதரிக்க முன்வருவார்களோ தெரியாது! நான் செல்லும் பாதை ஆபத்தானது என்பது புரிகின்றது.
பொதுவாக வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் படித்த பல்துறைவல்லுநர்களிடமும் ஒரு தயக்கத்தை நான் அவதானித்துள்ளேன். தமது மனதுக்குச் சரியென்று பட்டதை அவர்கள் வெளியிடத் தயங்குவார்கள். தமக்குள் பேசிக்கொள்வார்கள். ஆனால் பிற இனத்தார் முன்னிலையில் அவற்றை வெளிப்படுத்தமாட்டார்கள். இது முப்பதுவருடகாலயுத்தத்தின் பாதிப்பாக இருக்கலாம். எமது கருத்துக்களை, எமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நாம் பல விடயங்களைப் பகிரங்கமாகப் பேசத் தயங்குகின்றோம் என்றே நான் காண்கின்றேன். இவ்வாறான சூழல் என்னைப்போன்றவர்களைப் பாதிக்காததாலோ என்னவோ என் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறக்கூடியதாக உள்ளது. அன்றுந்தான் இன்றுந்தான் எனக்கு உண்மை என்பது முக்கியமானது. நீதிபதியாக பலவருட காலம் கழித்ததாலோ என்னவோ”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு”என்ற வள்ளுவர் வாக்கியம் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
ஒரு பக்கம் எனது வயது எனக்கு ஒரு பக்கபலமாக இருக்கின்றது. மறுபக்கம் என் இறை நம்பிக்கை இன்னொரு பக்கபலமாக இருக்கின்றது. கொழும்புத் தமிழர் ஒருவர் நான் மலிவான ஜனரஞ்சகத்தைப் பெற இவ்வாறு கூறியதாக தனதுகருத்தை வெளியிட்டுள்ளார் என்று அறிகின்றேன். மேலும் இனக் கலவரம் ஒன்று வெடிக்குமோ என்றகவலை அவருக்கு! சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நான் கொழும்பில் பிறந்துவளர்ந்தவன். அங்கு சென்றுவர வேண்டியவன். எனதுகுடும்பத்தாரும் ஆதனங்களும் அங்குதான் உண்டு. என் வாழ்க்கையையும் எனது பாதுகாப்பையும் மட்டும் நான் நினைத்திருந்தால் இவ்வாறான கருத்துக்களை என்னுள்ளேயே பூட்டி வைத்திருப்பேன்.
மலிவான ஜனரஞ்சகத்துக்காக என்னையே நான் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் இவற்றை எல்லாம் தெரிந்தும் எனது கருத்துக்களை வெளிப்படையாக் வெளிக்கொண்டு வந்ததற்குக் காரணம் உண்டு.
அதுதான் நீங்கள் கூறிய காரணங்கள்.ஒன்று புதிய ஜனாதிபதி. மற்றொன்று வரப்போகும் புதிய பாராளுமன்றம். சென்ற ஜனாதிபதித் தேர்தல் ஒருவிடயத்தை பளிச்” செனத் தெரியப்படுத்தியுள்ளது. நாடு கருத்துக்களின் அடிப்படையில் துருவமயப்படுத்தப்பட்டுள்ளமை தெரிகின்றது.
சிங்கள மக்களின் சிந்தனைகள் வேறு தமிழ் மக்களின் கருத்துக்கள் வேறு என்பது புலப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அவர்கள் சிங்கள பௌத்தத்தை நிலைநிறுத்த முன்வந்துள்ளார். அதற்கு சிங்களப் பொதுமக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த கோயில்கள், விகாரைகள், சின்னங்கள் யாவும் விரைவில் நிமிர்ந்தெழ இருக்கின்றன.
சரித்திரம் தெரியாத விஞ்ஞான அறிவு படைத்தசிலர்” இது ஒருபௌத்த நாடு”என்றும்” பௌத்தத்திற்கு முதலிடம் கொடுப்பதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றும் கூறியுள்ளார்கள்.
இது எந்த அளவுக்கு எம்மைப் பாதிக்கப்போகின்றதென்று அவர்கள் சிந்தித்தார்களோ தெரியாது. பௌத்த சின்னங்களை வட, கிழக்கில்நிறுவ சுமார் 500 கோடி (சரியான தொகை எனக்கு நினைவில்லை) பாதீட்டில் ஒதுக்கியபோது எமது தமிழ்த் தலைவர்கள் அதுபற்றித் தெரிந்தும் வாழாதிருந்தனர். காரணம் அவர்களுக்கு 300 கோடிதரப்போவதாக அப்போதைய பிரதம மந்திரி அறிவித்திருந்தார். இது தான் எமது பிரச்சனை. அரசாங்கத்துடன் ”சேர்ந்துபோங்கள், சேர்ந்துபோங்கள்”என்று பலர் எமக்கு அறிவுரைதருகின்றார்கள். சேர்ந்து போனால் அவர்கள் எம்மை வாங்கிவிடுவார்கள் என்பதை இவர்கள் உணர்வதில்லை. 300 கோடி கிடைக்கின்ற தென்று அறிந்தவுடன் எம் தலைவர்கள் வாய் பேசா மடந்தையர் ஆகிவிட்டார்கள்.
தற்போது வட, கிழக்கில் புத்தசமய சின்னங்கள் விரைவாகவந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். எங்கள் தமிழ்த் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள். பொருளாதாரவிருத்தி என்று அரசாங்கம் கூறும் போதும் நாங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு ஆலைகளைத் தந்து ஆதாயங்களை மத்துருட்டிவிடும். இப்பொழுதே எமது வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எம்மால் தடுக்கமுடியாமல் இருக்கின்றோம். இராணுவத்தை வைத்துக் கொண்டு பொருளாதாரவிருத்தி செய்தால் என்னநடக்கும் என்று எம்மவர் சிந்திக்கின்றார்கள் இல்லை. இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இராணுவத்தினர் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். இனிஅரசாங்கம் செய்யவிருப்பதை மக்கள் தடுப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு சூழலில்த்தான் நான் இந்நாட்டின் சரித்திரம் பற்றியஉண்மைகளை வெளிக்கொண்டுவர அவசியம் ஏற்பட்டது. சிங்கள பௌத்தர்கள் பலருக்கு முக்கியமாக பௌத்தபிக்குகளில் பலருக்குஉண்மைவரலாறுதெரியும். ஆனால் அவற்றை வெளிவரவிடாது இதுவரை சிங்கள மக்களை அறியாமையில் உழலவைத்து உசுப்பேத்தி வந்துள்ளார்கள். தமிழ் மக்களை வெளியேற்றி இந்தநாடு சிங்கள பௌத்த நாடு என்று பிரகடனப்படுத்த அவர்கள் காத்திருக்கின்றார்கள். குறுகிய நலன் கருதி எம்மவரும் ”இது சிங்கள பௌத்தநாடு”என்றே கூறத்தலைப் பட்டுள் ளனர். வணக்கத்திற்குரிய கர்தினால் மெல் கம் இரஞ்சித் ஆண்டகைஅடிப்படைதெரியாதுஅரற்றுகின்றாராஅல்லது அடிவாங் கப் பயப்பட்டு”இது ஒருபௌத்தநாடு”என்கிறாராதெரியவில்லை.
ஆனால் உண்மை அதுவன்று.
வடக்குகிழக்கு தவிர்ந்த பகுதிகளை வேண்டுமானால் சிங்கள பௌத்த நாடு என்று கூறலாம். வடக்குகிழக்குபகுதிகளில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். அவர்கள் என்றென்றும் வடக்குகிழக்கில் பெரும்பான்மையினராக இருந்து வந் துள்ளனர். எம்மக்கள் கிறிஸ்தவம், இஸ் லாம், சைவம் போன்ற மதங்களையே சார்ந்தவர்கள். பௌத்தத்திற்குச் சென்ற எமது ஆதித்தமிழ் மக்கள் கூட பௌத்தம் வேண்டாம் என்றுதிரும்பவும் சைவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேவடக்குகிழக்கை”சிங்களபௌத்த”அடைமொழிக்குள் கொண்டுவரமுடியாது.
இதைஉணர்த்தவேநான் உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றேன். 1956 இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரேமொழியைத் திணித்தனர். இப் போது வடகிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகின்றன.
எனவே இவ்விடயம் ஊர் அறியவேண் டும். உலகம் அறியவேண்டும். முக்கியமாக எமதுமக்கள் தலைவர்கள் அறியவேண்டும்.
நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ளகருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களை சிந்திக் கச் செய்யும். இப்பொழுதே பல சிங் கள இளஞ்சமுதாயத் தம்பி மார்கள் உண் மையைத் தேடத் தொடங்கி விட்டார்கள். ஆகவே தெற்கில் என் மீதுபரவலான எதிர்ப்பு எழுந்துள்ளதை அறிவேன். உண்மை கசக்கும் என்பதற்கு அது எடுத்துக் காட்டு.