கோத்தாபயவுடன் மோடி தொலைபேசி உரையாடல்

247 0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர்நரேந்திர மோடி தொலைபேசி உரையாடலொன்றைமேற்கொண்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அயல்நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களிற்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இலங்கைஜனாதிபதி மற்றும்பிரதமரை இந்திய பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

இந்திய மக்கள் சார்பிலும்தனதுசார்பிலும்புதுவருடவாழ்த்துக்களை தெரிவித்துள்ள நரேந்திர மோடி அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையையும் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்திய பிரதமரின் வாழ்த்துகளிற்கு தனது பதில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கோத்தாபய ராஜபக்ச 2020 இல் இரு நாடுகளும் தங்கள் மத்தியிலான நட்புறவை மேலும் விஸ்தரிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த இலக்கை நோக்கி நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளியிட்டுள்ளனர்.