கைத்தொழில் மயமாக்கலுக்கு சீனாவுக்கு 50கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும்!

319 0

ranil-wickramasinghe_ciகைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைக்கு தென்பகுதியில் சீன நிறுவனங்களுக்கு 50சதுரக் கிலோமீற்றர் நிலம் வழங்கப்படும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

15ஆவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொங்கொங் சென்றுள்ள அவர் அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தாய்லாந்திலும், மலேசியாவிலும் ஜப்பான் எதைச் செய்ததோ அதைப்போல்தான் இதுவும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னர் நாங்கள் உட்கட்டமைப்பில் மாத்திரம் கவனத்தைச் செலுத்தினோம். தற்போது நாங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் இணைந்து உற்பத்தித் துறையிலும் இணைந்திருக்கின்றோம்.

கம்பியில்லா இணைய வசதியை நாடெங்கும் அபிவிருத்தி செய்கின்றோம். தகவல் தொழில்நுட்ப நெறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவகங்கள் எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

சீனா தனது ஒரு வாயில் ஒரு கதவு முறையில் வந்திருக்கின்றது. ஜப்பானும் கூட வர்த்தக உடன்பாடுகளுக்கு வந்துகொண்டிருக்கின்றது.

சீனாவும், ஜப்பானும் நிதி அளித்திருக்கின்றன. ஆசியாவின் அபிவிருத்திக்கு எவ்வாறு இணங்கிச் செயற்படலாம் என ஒவ்வொரு நாடும் முடிவுசெய்யவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.