அம்பலங்கொட – குலிகொட பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அம்பலங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குலிகொட பகுதியில் இன்று அதிகாலை 1 .45 மணியளவில் இருக்குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அம்பலங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலே மோதல் இடம்பெற்றுள்ளதுடன்,அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த இராணுவ சிப்பாயின் மீது நபரொருவர் கூரிய ஆயுத்தால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிப்பாய் பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுச்சுட்டான் இராணுவ முகாமில் கடமைபுரிந்த 21 வயதுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , இவர் விடுமறையை கழிப்பதற்காக தனது வீட்டுக்கு வந்திருந்த போதே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.