அனைத்து முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் குறைக்கப்படும் என தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினமான இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பயணத்தின் முதல் கிலோ மீட்டருக்கான அடிப்படை விலை 60 முதல் 50 ரூபாயாக குறைக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இரண்டாவது கிலோ மீட்டரிலிருந்து அடுத்த கிலோ மீட்டர்களுக்கான கட்டணம் 45 முதல் 40 ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.