இம்முறை புத்தாண்டில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (31) இரவு 8 மணி முதல் கடந்த 12 மணி நேர காலத்தில் பல்வேறு விபத்துக்களில் 636 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் லயனல் முஹந்திரம்கே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(