பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமனம்

276 0
பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றிய விஜயாநந்த ஹேரத் மஹிந்த ராஜபக்ஷ மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய ஊடக அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் இவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக ஆலோசகராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.