நாட்டை கட்டியெழுப்பும் அரச சேவையில் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
ஜனாதிபதி செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பயனுள்ளதும், நட்புரீதியனதுமான அரச சேவையை முன்னெடுப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் எதிர்பார்ப்பு என தெரிவித்த அவர், கிடைக்கும் வருமானத்திற்கு அப்பால் சென்று நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கமாகும் எனவும் கூறினார்.
´அரச சேவை மக்களுக்கு சுமாயாக அமையக் கூடாது´ என்பதே ஜனாதிபதியின் எண்ணம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் அரச சேவை உறுதிமொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர் அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட வெறுப்பு முடிந்துள்ளதால் அனைத்து அரச ஊழியர்களும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அரச சேவைக்காக அதிகளவு நிதி செலவிடப்படுவதாகவும், ஜனாதிபதியின் நோக்கம் அரச சேவை மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களை மையமாக கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்பவும் சமமான ஜனநாயக நிறுவனங்களை உருவாக்கவும் அரச சேவை விரைவாக முன்னேற்றமடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.