எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய “நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983இ காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும் நாடே எனும் மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று அட்டன் சமூக நிறுவனத்தில் நடைபெற்றது.
பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் விசேட அதிதியாக மூத்த கவிஞர் அல்-அஸ்மத் கலந்து கொண்டனர். இந்நூலை பாக்கியா பதிப்பக உரிமையாளர் மல்லியப்பு சந்தி திலகர் வெளியிட்டு வைத்தார்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை லுணுகலை ஸ்ரீயும்இ நூல் அறிமுகவுரையை சுப்பையா கமலதாசனும் நிகழ்த்தினர்.
“நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983 என்ற நூலின் ஆய்வுரையை ஜே.லெனின்மதிவானம், மற்றும் நாமிருக்கும் நாடே எனும் நூலின் ஆய்வுரையை எம்.எம்.ஜெயசீலன் ஆகியோரும், கருத்துரையை கவிஞர் வே.தினகரன் மற்றும் எழுத்தாளர் சிவனு மனோகரன் ஆகியோரும் நிகழ்த்தினர்.
ஏற்புரையை நூலாசிரியர் கலாபூஷணம் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தியமை குறிப்பிடதக்கது.