மன்னாரில் கடற்படையினரால் தொடரும்அராஜகம் – (காணொளி)

404 0

new-pictureமன்னார் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அவர்களின் தலையீட்டின் காரணமாக பிரச்சினை சுமுகமாக தீர்க்கபட்டு கடற்படையினவரால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது இருந்த போதும் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீண்டும் கடற்படையினர் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அது மட்டும் அல்லாமல் படகில் கொன்டு செல்லும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனி தனி பாஸ் வைத்ததிருக்க வேண்டும் எனவும் தங்களுக்கு இவ் அறிவுறுத்தல்கல் மன்னார் மீன்பிடி திணைக்களத்தால் வாழங்க பட்டதாகவும் எனவே கடலுக்கு செல்ல அனுமதி அழிக்க முடியாது எனவும் தொரிவித்தனர்.

இது தொடர்பாக மன்னார் கடற்படை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்ட போதும் வேறு வேறு காரணங்கள் கூறி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அழிக்க படவில்லை இதனால் மீனவர்கள் தங்கள் அன்றாட மீன்பிடியை மேற்கொள்ளாது ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்
இவ்வாறான நிலை தொடருமாயின் மன்னாரில் கடற்படைக்கு எதிராகவும் மீன்பிடி திணைக்களத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மன்னார் மீனவர்கள் தெரிவித்தனர்