எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s got Talent)ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் இவ்வருடம் Bergheim (NRW) நகரில் 17.12.2016 அன்று நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் நடனம், பாடல், விகடம் (mimicry) போன்ற பல்வேறு நிகழ்வுகளை செய்து உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியும். இந் நிகழ்வில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கங்களும், முதல் மூன்று நிலைகளை பெறும் போட்டியாளர்களுக்கு கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்படுவார்கள்.
இவ் போட்டியில் தனிப்போட்டியாளராகவோ அல்லது குழுப்போட்டியாளராகவோ பங்குபெறலாம். அத்துடன் சிறுவர் மற்றும் இளையோர் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறும்.
இப்போட்டியில் பங்குபெற விரும்பும் போட்டியாளர்களை 20.11.2016 ற்கு முன்பாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து projects@tyo-germany.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
விண்ணப்ப படிவம் : https://www.dropbox.com/sh/qcgsg9g3au0e2o3/AAAyXWmW-okdn9e1KwZd8PSFa?dl=0
மேலதிக தொடர்புகளுக்கு : projects@tyo-germany.com
தமிழ் இளையோர் அமைப்பு-யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.