அமெரிக்காவில் அடுத்த வாரம் தேர்தல் – அல்-கொய்தா மிரட்டல்

298 0

201611050428082502_us-authorities-warn-of-al-qaeda-threat-to-election_secvpfஅமெரிக்காவில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கு அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட 37 மாகாணங்கள் உள்ளது.

தேர்தல் தினத்தன்று அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று நியூயார்க், டெக்சாஸ் மற்றும் விர்ஜினியா ஆகிய மாகணங்களுக்கு அமெரிக்க அரசின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ஐக்கிய அரசு அனைத்து பிரிவினருக்கு அறிக்கைகளை அனுப்பியுள்ளது. இருப்பினும் இது பெரிய அளவிலான மிரட்டல் அல்ல என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையங்கள், கப்பல் வழித் தடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.