பத்திரிகை படத்தால் பிரபலமான பெண் அகதியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவு

340 0

201611050558393667_pakistan-to-deport-national-geographics-afghan-girl_secvpfபத்திரிகை படத்தால் பிரபலமான பெண் அகதியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் போரின் போது ஷார்பத் குலா என்ற பெண் தனது 12-வது வயதில் பாகிஸ்தானுக்கு அகதியாக குடிபெயர்ந்து அகதிகள் முகாமில் இருந்துள்ளார்.

அப்போது பச்சை நிற கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவரை பிரபல ‘நேஷனல் ஜியாகிராபிக்’ பத்திரிகை புகைப்படக்காரர் படம் பிடித்து ‘ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அந்த பத்திரிகையின் அட்டையில் வெளியிட்டார். இதன் மூலம் அவர் உலக பிரபலம் ஆனார். பின்பு அங்கேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் ஷார்பத் குலா பாகிஸ்தானில் போலியான அடையாள அட்டையுடன் தங்கி இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சிறையில் 9 நாட்கள் இருந்த அவரை போலீசார் நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணையின்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனையும், பாகிஸ்தான் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் (நமது நாணய மதிப்புப்படி சுமார் ரூ.74 ஆயிரம்) அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை காலம் முடிந்ததும் அவரை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.