அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா தலைவன் பலி

328 0

201611050959093709_us-strike-killed-top-al-qaeda-leader-in-afghanistan-pentagon_secvpfஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பலியானதாக தெரியவந்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் அமெரிக்க சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இரண்டாம்நிலை தலைவனான பருக் அல்-கதானி என்பதை அதிமுக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ல் கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கிவந்த பருக் அல்-கதானி,  கடந்த (அக்டோபர்) மாதம் 23-ம் தேதி ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகானின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் அறிவித்துள்ளார்.