உங்களை நம்பித்தான் இருக்கேன்-கருணாநிதியிடம் அழகிரி!

296 0

alagiri_17062உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் கருணாநிதியை பார்ப்பதற்காக முக அழகிரி தனது மனைவி காந்தியுடன் சென்றதால் சிறிது நேரம் கோபாலபுர இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவி சகிதமாக உள்ளே நுழைந்த அழகிரி, நேராக மாடியில் இருந்த கருணாநிதி அறைக்குச் சென்றார். அங்கு கட்டிலில் படுத்திருந்த கருணாநிதியைச் சந்தித்துள்ளார்.

அழகிரி கருணாநிதி அறைக்குச் சென்றபோது, கருணாநிதியின் மூத்த மகன் செல்வியும் அங்கு இருந்துள்ளார். அழகிரி மனைவி காந்தி, கருணாநிதியிடம் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ‘‘முன்பைவிட இப்போது பரவாயில்லை” என்று சொல்லியுள்ளார்.

கருணாநிதியைப் பார்த்துவிட்டுக் கிளம்பியபோது… அழகிரி, ‘‘உங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டதும், பதற்றத்தில்தான் அன்னைக்கு வந்து பார்த்தேன். நான் வெளியூர் போறதால என் மனைவியோடு வந்து உங்களைப் பார்த்துட்டுப் போறேன். உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து நான் அமைதியாக இருக்கேன் அப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பித்தான் இருக்கேன்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு வெளியில் வந்துள்ளார்.