ரயில்வே சேவையை வினை திறனுடன் வழங்கும் நோக்கில் அடுத்த ஆண்டு, விசேட செயலணியொன்று நிறுவப்படவுள்ளது.
ரயில்வே துறையில் ஏதேனும் மோசடிகள், முறைக்கேடுகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை குறித்த செயலணியுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி மேற்கண்ட செயலணியுடன் தொடர்புகொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.